நயன்தாராவுக்கு விவாகரத்து என கிளம்பிய பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை பின்தொடர்வதை நிறுத்தினார் நயன்தாரா. அவரும், கணவரும் பிரியப் போவதாக பேச்சு கிளம்பியது. இதையடுத்து மீண்டும் விக்னேஷ் சிவனை ஃபாலோ செய்யத் துவங்கினார்.

இந்நிலையில் I am lost என நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்தார். அதை பார்த்தவர்களோ, பிரச்சனை தீரவில்லை, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிவது உறுதி தான் போன்று. இல்லை என்றால் நயன்தாரா ஏன் இது போன்று ஸ்டோரி வெளியிடப் போகிறார் என்று பேசினார்கள்.

ஊரே விவாகரத்து பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது மகன்கள் உயிர், உலக், விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்கு கிளம்பியிருக்கிறார் நயன்தாரா. விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்களோ, விவாகரத்து இல்லை போன்று. ஆனால் முன்னதாக அப்படி ஏன் ஸ்டோரி வெளியிட்டார்?. சுற்றுலா செல்லும் முன்பு வெளியிடும் ஸ்டோரி அல்லவே அது என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.