பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை
பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் படுகாயமடைந்தனர்.