காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு நிதி இல்லை: தென் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்!!

சிவகங்கை : தமிழக வேளாண் பட்ஜெட்டில் காவிரி– வைகை– குண்டாறு– கிருதுமால் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இரண்டாம் கட்ட பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யாதது தென் மாவட்ட விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

பெருவெள்ள காலங்களில் காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே வீணாக கடலில் கலக்கிறது. அதை திருப்பி கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து குளித்தலை, கிருஷ்ணராயபுரம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வரை உள்ள விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இந்த நதிநீர் இணைப்பு திட்டம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.