தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியது!!!!

சென்னை : கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்று(மார்ச் 8) முதல் கோடை வெயில் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி முதல் வாரத்தில் முடிந்தாலும், வடகிழக்கு பருவக்காற்று தொடர்ந்து வீசியது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இதுவரை இல்லாத வகையில், 84 ஆண்டுகளுக்கு பின், வங்கக் கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த மண்டலம், தமிழக கரையை நெருங்கும்போது வலுவிழந்தது.அதனால், கடந்த சில தினங்களாக, டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழை, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.