சேர்மன் கணவரை கட்டிப்பிடித்து அழுத மனைவி – “சேது கருணாநிதி”…

ராமநாதபுரத்தில் கணவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்ற போது மனைவி கட்டித் தழுவி, அழுது ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திமுக 53 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியுள்ளது. நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பரமக்குடி தெற்கு நகர் பொறுப்பாளர் சேது கருணாநிதி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 2 முறை நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.. ஒருமுறை அவரது மனைவி சுதா ராணி நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்… 2011-ல் சேது கருணாநிதி நகர் மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளார். இந்நிலையில், நகர்மன்ற தலைவர் பதவிக்கு சேதுகருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.