புடின் மேதை.. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டு!

ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மேதை என பாராட்டியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.  தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் ஆகிய கிளர்ச்சியாளர்களால் ஆளும் பகுதிகளை சுதந்தரம் பெற்ற பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் அறிவித்தார். உக்ரைனின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.