பாகிஸ்தான்: `சுவிஸ் வங்கியில் பில்லியன் டாலர்…’ – கசிந்த தரவுகள், பரபரப்பை ஏற்படுத்திய அறிக்கை!
பாகிஸ்தானியர்கள் வைத்திருக்கும் கணக்குகளில் சராசரி அதிகபட்ச இருப்பு 4.42 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (நாணயம்) என மற்றுமொரு செய்தித்தாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், அரசியல்ரீதியாக அம்பலப்படுத்தப்பட்ட பலர், தாங்கள் பதவியிலிருந்த காலகட்டத்தில் தொடங்கிய இந்தக் கணக்குகளைப் பற்றிய விவரங்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த, பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கைகள் பாகிஸ்தானில் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.