காங்கிரஸ் அல்லாத புதிய அணியா? சிவசேனா விளக்கம்

மும்பையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் “காங்கிரஸ் இல்லாத அணி நிச்சயமாக உருவாக்கப்படாது. நேற்றைய சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி பற்றி பேசியதில்லை.  மம்தா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்குவது பற்றி பேசியபோது கூட சிவசேனாதான் முதலில் காங்கிரஸ் ஆதரவுக் குரலை எழுப்பியது. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் நிச்சயமாக அனைவரையும் அரவணைத்து அழைத்து அணியை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறோம்” என்று கூறினார்.
காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வரும் நிலையில், சிவசேனாவின் நிலைப்பாடு மம்தாவின் முயற்சியை வலுவிழக்க செய்யும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல். 

Leave a Reply

Your email address will not be published.