டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கிய 55 வயது முதியவர்!

பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் மலசிக்கல் மற்றும் அடி வயிற்றில் வலி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்பெயரை வெளியிட விரும்பாத முதியவர் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு மலசிக்கல் மற்றும் அடி வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் ஏதோ பெரிய பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அந்த பொருள் வயிற்றில் உள்ள குடல் பகுதியில் சிக்கி இருந்துள்ளது. இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கியதாக கூறியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.