புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு அநீதி இழைப்பதை கண்டித்து ஆர்பாட்டம்

26.12.2020.

கிட்டத்தட்ட 94 விழுக்காடு தமிழர்கள் வசித்து வரும் புதுச்சேரியின் கிரிக்கெட் அணியில் முழுக்க முழுக்க இந்திக்காரர்களே ஆக்கிரமித்து நிற்கும் அவலத்தை எதிர்த்தும், புதுச்சேரி – காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே 90 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரியும் இன்று (26.12.2020) காலை 10 மணிக்கு, புதுச்சேரி இராஜா திரையரங்கம் முன்பு தமிழின உணர்வாளர்களும், மட்டைப்பந்து வீரர்களும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தோழர்கள் தமிழ் இன உணர்வார்கள் ஒன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் புதுச்சேரி மண்ணின் மக்களுக்கு விளையாட அனுமதி வழங்க சட்டம் இருந்தும் சட்ட புறம்பாக இந்தி காரர்களுக்கு வாய்ப்பளித்து அதன்மூலம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஊழல் செய்து இருக்கும்ACPதலைவர் மற்றும் அவருக்கு பரிந்துரை செய்த அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.