சமூக நீதிக்கு எதிராக செயல்படும் ரவி:
ஆளுநர் ரவி சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ். நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆளுநர் என்ற பதவியையே திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.