2 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 18ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
16 மற்றும் 18 ஆம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்