துர்கா பூஜையும்…! இறை அன்பும்..!

துர்கா பூஜையும்…!
இறை அன்பும்..!


இறைவன் அன்பு ஆனவர்.. ஆண்டவர் இறக்கமானவர்.. என்றெல்லாம் கண்ணுக்குத் தெரியாத கடவுளைப்பற்றி ஆன்மீகவாதிகள் பலவாறாக போற்றிப் புகழ்வது உண்டு..
ஆனால் அநியாயத்திற்கு இறைவன் இவ்வளவு அன்பு ஆனவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை… இறைவன் இல்லை என்பவரையும் கடவுள் கைவிட மாட்டார் என்றும்..
பாவிகளை கூட ஆண்டவர் இரட்சிக்கிறார் என்பதில் ஐயமே கிடையாது என்பது உண்மைதான் என்று நிரூபித்து விட்டது இந்த இறை அன்பின் நிகழ்ச்சி..

சரி விஷயத்திற்கு வருவோம்…
இந்த திராவிட நாட்டையே படைத்தவன் நான்தான்..
எனவே நான்தான் பெரியவன் என்று படைக்கும் கடவுளும்…

திராவிடத்தை திராவிட தமிழகத்தையும் நான் தான் காத்து வருகிறேன் என்பதால்….
நான் தான் பெரியவன் என்று காக்கும் கடவுளும்….

கல(ழ)கம் செய்ததால்….

ஆதியும் அந்தமும் இல்லாமல் அருட்பெரும் ஜோதியாக.. அடியும்.. முடியும், அறிய முடியாதபடி எழுந்து நின்ற அந்த அருட்பெரும் ஜோதியான அண்ணாமலையின்.. அஸ்திவாரத்தையே நான் அசைத்து விடுவேன் என்று பன்றி அவதாரத்தில், அண்ணாமலையிடம் பன்றி சவால்விட்ட புராண கதைகளை எல்லாம் ஆன்மீக அன்பர்கள் படித்திருப்பார்கள்..

அதுபோல.. தற்போது
அக்னி ரூபமான எரிசக்தி மின்சாரத்தில் ஊழல் என்று அண்ணாமலை குரல் கொடுக்க…
அதை நிரூபிக்க முடியுமா என்று அண்ணாமலையின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்து விடும் படியாக பாலாஜி சவால்விட…

அண்ணாமலையோ அசட்டு சிரிப்புடன்.. ஆதாரத்தை கொஞ்சமாக வெளியிட…

அதிர்ந்துபோன இறையன்பு உடனுக்குடன் கழகத்தின் கலங்கத்தை காத்து ரட்சிக்க…
தலைவரின் கவனத்திற்கு சரியான தகவலை தந்து…

ஒரு பேரிடரை தடுத்து நிறுத்திவிட்டார் இறையன்பு..

சமீபத்தில்தான் நவராத்திரி எனும் துர்கா பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது….

இறைவனை நம்பினோர் கைவிடப்…. படார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்..!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி…

Leave a Reply

Your email address will not be published.