தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை..
உடுமலையில் யூ கே பி நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஒருவர் கைது திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யு கே பி நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் தலைமையில் காவல்துறையினர் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார் மேலும் அவரிடம் இருந்த 222 புகையிலை பொருட்கள் பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்