வயது குழந்தை பலி

ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை பலி

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன், அருள்மொழி தம்பதி இவர்களுக்கு 3 வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் வைத்து இருந்த ஆல் அவுட் கொசு மருத்தை எடுத்து சிறுவன் கிஷோர் குடித்துள்ளான்.

இதனை கண்ட பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கிருந்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் 11/10/2021 திங்கள் கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் கிஷோர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த பம்மல் S-6 சங்கர் நகர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பம்மல் S-6 சங்கர்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: இம்ரான் பம்மல் பகுதி செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.