தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி..
தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பிட் நாய்க்கு மகன் கேத்திர நாயக் வயது 20 பல்லடம் அருகே சின்ன கரையில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவர் நேற்று முன்தினம் இரவு பல்லடம் அருகே உள்ள குண்ணங்கள் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பல்லடம் நோக்கி வந்த தனியார் பஸ் கேத்திர நாய்க்கு மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்