13 வருடங்களுக்கு பின் இணையும் ஹரி – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன் முதலில் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்ப்பர்ப்பு அதிகமாகியுள்ளது. 

பழனியில் ஆராம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில நின்றது. தற்போது தூத்துக்குடியில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கி மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் முடிந்து திரையரங்கு திறக்கப்பட்வுடன் வெளியிடலாம் என்று அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆவதற்கு தயாராக சினம் மற்றும் பார்டர் படங்கள் உள்ளன. அருண் விஜய் – ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் பாக்சர் என்ற படம் அறிவிப்பு வெளியாகி கிடப்பில் உள்ளது. 

சரோ சண்முகம் இயக்கத்தில் அருண் விஜயின் மகன் நடிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயக்குமார் என மூன்று தலைமுறையும் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.