சமூகப்பணி அறக்கட்டளைக்கு 5 தையல் இயந்திரம்..

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
E. கருணாநிதி MLA,
நாவை சொக்கலிங்கம் ஐயா பீதாம்பரம் சமூகப்பணி அறக்கட்டளைக்கு 5 தையல் இயந்திரம் வழங்கினார்!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி 19வது வார்டு மாதா கோவில் தெருவில் நாவை சொக்கலிங்கம் அய்யா பீதாம்பரம் சமூகப்பணி அறக்கட்டளைக்கு
5 தையல் இயந்திரங்களை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் E. கருணாநிதி MLA, அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பம்மல் நகர செயலாளர்
வே.கருணாநிதி,
மற்றும் 19வது வார்டு வட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி/ கவிதா பாலச்சந்தர், மற்றும் வட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன் வெங்கடேசன் சேகர் பரத் செல்வகுமார் ஆனந்த் கருணா ஹரிகிருஷ்ணன் செந்தில் வினித் ஹரி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தி : s.முஹம்மது ரவூப்

Leave a Reply

Your email address will not be published.