கொரோனா நோயாளிகள் நடமாட்டம் : மருத்துவமனை நிர்வாகிகள் அலட்சியம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து கேன்டீன் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருவதாக தொடர் புகார். செய்தி கேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கேமராக்களை பறித்து செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடும் மருத்துவமனை காவலாளிகள். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து கொரோனா நோயாளிகள் வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தும் அவர்களை கண்டுகொள்ளாமல் வெளியே அனுமதித்து மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவது கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமையும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்