நடுநிலையாளர்களின் கருத்து
எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தால் அதற்கு அவர்கள் கூறும் காரணம் இப்போதே தயார்
வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால் இது ஜனநாயக வெற்றி, மக்கள் அளித்த தீர்ப்பு என கூறுவார்கள்
அவர்கள் தோற்றால் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி என்று ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் இந்த காரணத்தை தான் கூறும்.
அதற்காகத்தான் இப்போது இருந்து எதிர்க்கட்சிகள் ஓட்டுப் பதிவு எந்திரத்தை குறை கூறி வருகிறார்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றால் கடந்த காலங்களில், எதிர்கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அப்படியானால் அவர்கள் அந்த எந்திரத்தில் முறைகேடு செய்து தான் அவர்கள் வெற்றி பெற்றார்களா?
ஓட்டுப் பதிவு எந்திரத்தை பொதுமக்கள் நம்பும் இந்த சூழலில் தோல்வியடையும் அச்சம் உள்ள எதிர்க்கட்சிகள் தான் இவற்றை குறை கூறி வருகின்றன.
ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என பலமுறை தேர்தல் ஆணையமும் விஞ்ஞானிகளும் கூறிய பிறகும் எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்றால் ஜனநாயக வெற்றி என்றும், தோற்றால் ஓட்டு பதிவு எந்திரத்தை குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன என்பதே நடுநிலையாளர்களின் கருத்து