தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ” பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட விரைவில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் இதனை வலியுறுத்துகிறது.
திமுக தான் தமிழகத்தில் மதுபானக்கடைகளை கொண்டு வந்தது.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அரசின் கொள்கையே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவது தான்.
சசிகலாவை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பே இல்லை. தமிழக முதல்வர் ஏற்கனவே இதனை தெளிவுபடுத்திவிட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைக்கும். அதிமுக கொடி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்து, எங்களுக்கு கட்சி மற்றும் கட்சியின் கொடியை உபயோகம் செய்ய அதிகாரம் வழங்கியுள்ளது ” என்று தெரிவித்தார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்