400 மருத்துவர்கள் பலி
இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 400 மருத்துவர்கள் பலி
கொரோனா இரண்டாவது அலையில் நாட்டில் இதுவரை சுமார் 400 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 420-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அதில் அதிகபட்சமாகத் தில்லியில் 100 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.
பிகாரில் குறைந்தது 96 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31, தெலங்கானாவில் 20, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் 16 மருத்துவர்கள் பலியானதாகவும், கரோனா 2-ம் அலையில் மகாராஷ்டிரத்தில் 15 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்று ஐ.எம்.ஏ-வின் மாநில வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மலர் மின்னிதழ்.
செய்தியாளர்.தமீம்அன்சாரி..