உதயநிதி ஸ்டாலின்,MLA, ஆய்வு மேற்கொண்டார்!
உதயநிதி ஸ்டாலின்,MLA,
ஆய்வு மேற்கொண்டார்!
நடந்து முடிந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்தது, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடையே வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் மக்களின் குறைகளை தீர்வு கண்டு வருகின்றனர், இந்நிலையில்
ராயபுரம் மண்டலம்-5 கோட்டம்-63 புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு ஹவுசிங் போர்டு, குடிசை மாற்று வாரியம்
பகுதிகளில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டு வெகுநாட்களாக எடுக்கப்படாத குப்பை கழிவுகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் இதுவரையில் இதுபோல் யாரும் முன்வந்து செய்ததில்லை அதிகாரிகள் கூட செல்வதற்கு அச்சப்படும் இந்நேரத்தில் முதல்வர் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் அவரது தொகுதியில் முன் வந்து செய்வது பாராட்டுக்குரியது என்று வாழ்த்தும், தெரிவித்தனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்