மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கபசுரக் குடிநீர் வழங்கினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,வாவிபாளையம் கிளையின் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் மூன்றாம் நாள்
( மே 12)நிகழ்வு வாவிபாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே பழனிச்சாமி ஒன்றியக் குழு உறுப்பினர்
M. மகாலிங்கம் , நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர்
S. முத்துசாமி, இயக்குனர் நெருப்பெரிச்சல் வெங்கடாசலம், செயலாளர் துரைசாமி
புதிய தடம் அமைப்பின் தலைவர்
K. சுந்தர முத்து,
ஸ்ரீ என்எஸ்கே நிட் வேர் N. சண்முகராஜ், அதிமுக நிர்வாகிகள் A.தேவராஜன் N.செங்குட்டுவன் செல்வராஜ், பாலாஜி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்
R. துரைசாமி
சிட்டி பிளக்ஸ் உரிமையாளர்
S. நாகராஜ்,
எம். சக்திவேல் , தாய்தமிழ் பட்டிமன்றம் குழு தலைவர் பாண்டி,
தமிழ் மின்னிதழ் பத்திரிக்கை நிருபர் மருதமுத்து, திருப்பூர் ஐ பவுண்டேஷன் மருத்துவமனை ஊழியர் A. பழனாள், மாரி குட்டி, சங்கரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கி சிறப்பித்தனர்.கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்புப் பணியில் தினசரி அதிகாலை 3 முதல் கபசுரக் குடிநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தோழர்கள் G.செல்வி,
G. சுசீலா,k.சர்மிளா,
S. பானுமதி மற்றும் கிளை செயலாளர் தோழர் ஸ். அழகு மற்றும் தோழர்கள் ஆர். பாலசுப்பிரமணியம் ஆர்.மோகனசுந்தரம் கே.பி .குமார் ,
வெள்ளைசாமி, பிரகாஷ், அனைவருக்கும் நன்றிகள்…,மேலும் முகாமில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து ,
சமூக இடைவெளியுடன் தினந்தோறும் வருகை தந்து கபசுரக் குடிநீர் பெற்றுச் சென்று கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தங்கள் குடும்பத்தினருக்கும் வழங்கிய, மற்றும் நிகழ்வு இடத்தில் கபசுர குடி நீர் பருகிய அனைவருக்கும் நன்றிகள்……3 நாட்கள் நடைபெற்ற முகாமில் தினசரி சராசரியாக 800 பேருக்கு இந்த கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது இரண்டாம் நாள் நிகழ்வில் 500 பேருக்கு முகக் கவசம் வழங்கி உதவிய ரித்விக் அப்பேரல்ஸ் உரிமையாளர
S. மயில்சாமி அவர்களுக்கும் நன்றிகள். மேற்கண்ட பணிகள் தொடர்ந்து அருகில் உள்ள கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இதுபோன்ற பேரிடர் கால மக்கள் பணி அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக. செய்தி ஆசிரியர் மருதமுத்து

Leave a Reply

Your email address will not be published.