தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கைது – 6 கிலோ கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கைது – 6 கிலோ கஞ்சா பறிமுதல்
✍தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமைக் காவலர் மோகன்ஜோதி, மற்றும் முதல்நிலைக் காவலர் சொர்ணபாலன் ஆகியோர் இன்று (06.05.2021) தருவைக்குளம் ரோடு கிழக்கு கடற்கரை சாலை ரோடு சந்திப்பு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அவர் விளாத்திகுளம் சிப்பிக்குளம் பகுதி சுனாமி நகரைச்சேர்ந்த ரெம்சியாண்டிக் பச்சேக் மகன் அமலன் பச்சேக் (53) என்பதும், அவர் விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் A.மருதமுத்து