தலைமைச்செயலாளர் நேற்று முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா- தலைமைச்செயலாளர் நேற்று முக்கிய ஆலோசனை. , கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் நேற்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் கொரோனாவுக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
செய்தியாளர் ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்