திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்


இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்றாகும். 1939 மே 16ஆம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி.ராஜாஜியால் இந்த நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் முதல் அலை வரிசையில் மாணவர் நிகழ்ச்சி, சூரியகாந்தி, பிள்ளைக்கனியமுது, பண்ணை இல்ல ஒலிபரப்பு, இளையபாரதம், உழைப்பவர் அரங்கம், பூவையர் பூங்கா, விளையாட்டு அரங்கம் போன்ற பல பிரிவுகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 2001இல் ரெயின்போ பண்பலையும், 2007இல்ராகம் டிடிஎச் சேவையும் தொடங்கப்பட்டன.பண்பலை அலைவரிசை 25 லட்சம் நேயர்களைக் கொண்டுள்ளது.

திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான சேவையை திருச்சி வானொலி நிலையம் வழங்குகிறது. கலை, பண்பாடு, நாகரிகம், மொழி ஆகியவற்றை வளர்ப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அன்றாட முக்கிய செய்திகள், வேளாண்மை, அரசின் திட்டங்கள், கல்வி, பொழுதுபோக்கு போன்ற பல துறைகளில் ஒலிபரப்பு செய்கிறது.

Sgs கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.