லடாக்கில் லேசான நிலநடுக்கம்
லடாக்கில் நேற்று ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் தலைநகர் லேவில் இருந்து 51 கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை நில அதிர்வு உணரப்பட்டதால், அங்குள்ள மக்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் ரசாக்
தமிழ்மலர் மின்னிதழ்