“வாணி ராணி”

தமிழகத்தின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான விஜயா புரொடக்ஸன் 1974 இல் தயாரித்து வெளியிட்ட, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “வாணி ராணி” படம்
திரைக்கு வந்து இன்றுடன் 47 வருடங்கள் கழிந்தன.ஹிந்தியில் “சீதா ஓர் கீதா”என்ற பெயரில் வெளியான இப்படம் தெலுங்கில்
“கங்கா மங்கா”என்ற பெயரிலும் வெளியாகி வெற்றி கண்டது. இப்படத்தில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடங்கள்.இவர்களுக்கு ஜோடி சிவாஜி,முத்துராமன். தங்கவேல்,செந்தாமரை,டி.கே.பகவதி,
காந்திமதி,வை.விஜயா,மாஸ்டர் சேகர்,ஜி.வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது இதன் ஆரம்ப இயக்குநர் சாணக்யா அவர்கள் காலமாகவே,தொடர்ந்து சி.வி.ராஜேந்திரன் இயக்கினார்.இசை வழங்கியவர் கே.வி.மகாதேவன்,தயாரித்தவர்கள் நாகிரெட்டி,சக்ரபாணி…(விஜயா புரொடக்ஸன்)..சிவாஜிக்கு இது 170 வது படம்…!
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை..

Leave a Reply

Your email address will not be published.