மக்கள் அதிகம் கூடும் பகுதியில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
சென்னை ஏப்ரல் 8 திருவொற்றியூரில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் இ .கா.பா உத்தரவின் பேரில் காவல் துறை சார்பாக கொரோனா தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வு நடைபெற்றது இதை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார் இதில் திருவொற்றியூர் உதவி ஆணையர் பொன் சங்கர், ஆய்வாளர்கள் சுதாகர், புவனேஸ்வரி, ஷீலா மேரி, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி செல்லதுரை
தலைமை நிர்வாகி