இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம்

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 101 ஆக உள்ளது.

இதுவரை கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.   

இந்நிலையில் வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.