நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 58

உப்பு சுவை வரிசையில் உள்ள காய்களில் நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இது ‘நூல்கோல்’எனவும் ‘நூற்கோல்’ அழைக்கபடுகிறது. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். நூக்கலில் காலோரிகள் குறைவு, மேலும் உடல் எடை அதிகரிக்காது. நூக்கலில் வைட்டமின் ஏ, சி, இ,மாங்கனீசு, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன.

நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது,உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.
மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.
இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.
புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும் நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. காலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது. 6. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் உள்ளன.
உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும். கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்க எண்ணிலடங்கா பச்சைக் காய்கறிகளை நாம் பகுத்தாய்வு செய்து அளவோடு உணவுடன் சேர்த்து உண்டு நாம் நமது ஆரோக்கியத்தை காப்போமாக….!
எதையும் வருமுன் காப்போம்…! நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:-சங்கரமூர்த்தி…. 7373141119

Leave a Reply

Your email address will not be published.