லியோனியை தட்டி கேட்க முடியாத தலைவர் ஸ்டாலின் – எடப்பாடி பரப்புரை
சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, தேர்தல் நேரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமான வார்த்தைகளால் லியோனி பேசுகிறார். பெண்களின் இடுப்பைச் சம்பந்தப்படுத்திப் பேசிய திண்டுக்கல் லியோனி போன்றவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் தகுந்த பாடத்தை நீங்கள் கற்பிக்க வேண்டும். இப்படி பெண்களைக் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாகப் பேசுகிறவர்களையெல்லாம் தட்டிக்கேட்க முடியாத தலைவர்தான் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் எப்படி நடமாட முடியும்? ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே இவர்கள் பெண்களை இப்படி அவமானப்படுத்திப் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, கீழ்த்தரமான பேச்சு பேசுவது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம். இவ்வாறு அவர் பரப்புரையாற்றினார்.