நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 55
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்…
தற்போதையஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உட்கார்ந்தவாறே வேலை செய்வது அல்லது மன அழுத்தம் போன்றவற்றால், ஏராளமானோர் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அஜீரண கோளாறு தீவிரமானால், அதன் விளைவாக நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி மற்றும் சில நேரங்களில் குடல் புற்றுநோய் கூட ஏற்படலாம். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறிப்பிட்ட நொதிகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நீர்க்கச் செய்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்
இஞ்சி சேர்த்த சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் கே போன்றவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாட்டை தீவிரப்படுத்தி, விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இந்த ஜூஸில் கலோரிகளும் குறைவு. இந்த ஜூஸை தினமும் குடித்து, சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
சிறுநீரக பாதை தொற்றுக்கள் என்பது, சிறுநீர் செல்லும் குழாய்களில் மட்டுமின்றி, சிறுநீர்ப்பையிலும் மோசமான பாக்டீரியாக்களின் தாக்கத்தால் ஏற்படும். பெரும்பாலும் இது பாலியல் உறவின் போது அதிகம் ஏற்படும். சுரைக்காயில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். எனவே உங்களுக்கு இந்த தொற்று ஏற்படாமல் இருக்க நினைத்தால், இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள்.
சுரைக்காய் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்..
இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வில் இருந்து விடுபடலாம். இருப்பினும் இந்த பானத்தைக் குடிக்கும் முன் கர்ப்பிணிகள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
எப்போது இரத்தமானது தமனிகளின் சுவருக்கு எதிராக அழுத்தப்படுகிறதோ, அப்போது ஏற்படும் நிலை தான் உயர் இரத்த அழுத்தம். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பானமாகும்.
கல்லீரலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனால் உயிரையே இழக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், அதிகளவு மது பானங்களை அருந்துவது, குறிப்பிட்ட தொற்றுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவற்றால் கல்லீரலில் அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதைத் தடுக்க, இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடியுங்கள்.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி.
இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப்(இழந்தவர்கள்) பெறுவார்கள்..
ஆரோக்கியம் மிகுந்த பச்சைக் காய்கறிகளில் பயன்களை பகுத்தறிந்து அவற்றை உணவுடன் சேர்த்து உண்டு நமது ஆரோக்கியத்தை பேணி காப்போமாக…..
எதையும் வருமுன் காப்போம்…!
நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:-சங்கரமூர்த்தி…. 7373141119