“குலமா குணமா”
1971 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,நாட்டியப் பேரொளி பத்மினி,மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்,வாணிஸ்ரீ,நாகேஷ்,
எம்.என்.நம்பியார் ஆகியோர் நடிப்பில் இறையருள் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்,திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பை வலியுறுத்தி உருவான திரைப்படம் “குலமா குணமா”.இப்படத்தின் உச்சக்காட்சியில் அண்ணன் தம்பி இருவரும் சொத்துக்களை இரண்டாக பாகம் செய்யும் காட்சியில் மூத்தவர் சிவாஜி கணேசன் தன்னை ஒரு பங்காகவும் சொத்துக்களை மறு பங்காகவும் பிரித்து வைத்து தம்பி ஜெய்சங்கரிடம்,எந்த பங்கு வேண்டும் எனக் கேட்க அவர்,அண்ணன் சிவாஜியைக் கட்டியணைத்து எனக்கு இந்தப் பங்குதான் வேண்டும் என நெகிழ்சியாக கூறும் இடம் படத்தின் வெற்றிக்கு துணை நின்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது …!
எஸ்.கணேசன் ஆச்சாரி
சதீஷ் கம்பளை இலங்கை