இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு ; இந்தியா அறிக்கை

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று  நடைபெற்றது.

இலங்கை அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளும், சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்தது. மேலும் 13 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தன.

இதனால் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில்  நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு முன் இந்தியா தாக்கல் செய்த அறிக்கையில் 13 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்த வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படை கருத்துகளை கொண்டது.அதில் ஒன்று இலங்கை தமிழர்களுக்கான சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான எங்களின் ஆதரவு.மற்றொன்று இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்தல். இந்த இரண்டிற்கும் பரஸ்பர ஆதரவு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.இந்த இரண்டையும் அடையாளம் காணுவதில் இலங்கையின் செயல்பாடு மிகச்சிறப்பானது.

அரசியல் அதிகார பகிர்வில் இலங்கை அரசாங்கம் அதன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச சமூகம் விடுத்துள்ள அழைப்பை இந்தியா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.