திருக்குறள்

நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
(குறள் எண்:0495)

மு.வ உரை:

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

முதலை நீரில் இருக்கும்வரை தான் மற்ற உயிர்களிடம் வெற்றிபெறும், நீரைவிட்டு வெளியே வந்தால் மற்ற உயிர்களிடம் அது தோற்றுவிடும்.

திருக்குறள் பரப்புரைஞர்
திண்டுக்கல் அ.ஷாஜஹான்
அரசுப்பள்ளி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.