நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 51
பேரீச்சங்காய் கடுந்துவர்ப்பு உடையது..
செம்பழத்தைத் தின்றால் தேங்காய்த் துண்டுகளைப் போலிருக்கும்…
சிற்றீச்சை(கர்ஜுரம்), பேரீச்சை(பீண்ட கர் ஜுரம்) என இருவகை உண்டு..
பேரிச்சங்காய் பக்குவம் செய்து பழமாகநாட்களுக்கு கெடாமல் இருக்கக் கூடியவை ஆகும்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்றஅத்தியாவசிய தாதுக்கள், இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் A, B, B2, B5 மற்றும் வைட்டமின் E சத்துக்கள் உள்ளன.
தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர
கண் சம்பந்தமான கோளாறுகள் வராது, இருந்தாலும் குணமாகும்.
மாலைக்கண் நோய் தீரும்.
வைட்டமின் A குறைவினால் கண்பார்வை மங்கலாகும் இதற்கு பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.
பேரீச்சம்பழத்தில் ஃப்ளோரின் என்னும் சத்து உள்ளது இது பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் பல் சம்மந்தமான வியாதிகள் குணமடையும் மேலும் பற்களை எந்த நோயும் தாக்காமல் தடுக்கும்.
பல் சொத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால் நீங்கும்.
பேரீச்சம்பழம் தினம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை நம் உடலுக்கு தேவையான வலிமையும், சக்தியும் உடனுக்குடன் கிடைக்கச் செய்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் மற்றும் புரதம் உடல் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது, மெலிந்த உடல் உடையவர்கள் உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பேரீச்சம் பழத்தில் கலோரிகள் 23 தான் உள்ளது அதனால் உடல் எடையை குறைக்க இருப்பவர்கள் உணவில் பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும் சோர்வு ஏற்படாது உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.
பேரீச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.
பேரீச்சம் பழத்தில் இருக்கும் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.
எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு இணைப்பு ஜவ்வு குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட குணம் பெறலாம்.
இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் நீரழிவு நோயாளிகள் தாராளமாக பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தினமும் 1 அல்லது 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக இருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும்.
தினசரி பேரீச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை.
மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
குழந்தைகள் பல் முளைக்கும் சமயத்தில் வயிற்றுக் கடுப்பு மற்றும் பேதியால் அவதியுறும் அதற்கு, பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து 1 தேக்கரண்டி வீதம் 3 வேளை கொடுக்க தீரும்.
தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல் நோய்கள் வராது, குடல் பிரச்சனைகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
வயிறு மற்றும் குடலில் உள்ள அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் சருமத்த்தை மிருதுவாக்குகிறது, சரும சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.
வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
பேரீச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன.
சிறியவர் முதல் பெரியவர் வரை உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரீச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல், கபம் குணமாகும், குழந்தைகளும் அருந்தலாம்.
பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் மற்றும் பிரசவத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை ஈடு செய்து புதிய இரத்தத்தை உற்பத்தி செய்திட பேரீச்சம்பழம் பெரிதும் உதவும்.
உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து பேரீச்சம்பழத்தோடு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும், வெள்ளை போக்கிற்கு தீர்வளிக்க கூடியது.
கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரீச்சம் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.
பேரீச்சம்பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பேரீச்சம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் இரத்தத்தின் அளவு குறையாமல் பாதுகாக்கும்
இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்ய பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
பெண்கள் 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு பேரீச்சம்பழம் நல்ல ஒரு தீர்வாகும் (ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புக் கோளாறு நோய் எலும்பு முறிவு மற்றும் மூட்டு எலும்புக்களில் வலி ஆகியற்றை ஏற்படுத்தும்) இது ஒரு கால்சியம் குறைபாடாகும். ஆகவே தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று இந்த பிரச்சனைகள் சரியாகும்.
தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரீச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும்.
பேரீச்சம்பழத்தை கழுவி அதாவது சாப்பிடுவதற்கு சற்று முன் தண்ணீரில் இரு முறை அலசி சாப்பிட்டால் நல்லது பதப்படுத்தி சந்தைக்கு வரும் பழம் என்பதால் இதில் கண்ணுக்கு தெரியாத தூசு, அழுக்கு போன்றவைகள் ஒட்டியிருக்கலாம் அதனால் சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். உடலில் ஏற்பட்டுள்ள ஆறாத புண்கள் ஆறும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது.தீராத நோய்கள் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.
பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது. இது தொண்டை தொற்று நோய்களையும், அதனால் வரும் காய்ச்சலையும் குணப்படுத்த வல்லது.
பேரீச்சம் பழங்களை வாங்கும் போது சரியாக பார்த்து வாங்க வேண்டும். பேரீச்சம்பழத்தை பளபளப்பாகக் காட்ட அதன்மீது பெட்ரோலியக் கழிவாகக் கிடைக்கும் தாது எண்ணெயை தடவுவார்கள் இதனை வாங்கி சாப்பிட்டால் வயிற்றுப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
பூச்சி அரித்த பழங்களும், அழகாக பேக்கிங் செய்து வரும் கவனத்துடன் பார்த்து வாங்கவேண்டும். முக்கியமாக பேக்கிங் செய்யப்பட்ட தேதியை பார்த்து வாங்குங்கள் .
தோல் தடித்து காணப்படும் பேரீச்சம்பழம் நல்ல இனிப்பாக இருக்கும்,
சாப்பாட்டுக்கு பின்பு எல்லோரும் பேரீச்சை பழம் சாப்பிடுங்கள், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எல்லோருக்கும் உகந்தது. பேரீச்சம் பழத்தை வாங்கி ஒரு தடவை சாப்பிட்டு பாருங்கள்
பேரீச்சம்பழத்தை நாம் அன்றாடம் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைகிறது மேலும் ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த உடல் நலத்தை பாதுகாக்கும் பழமாகும்.
பாலைவனப் பகுதி மக்களின் முக்கிய உணவான பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு அதன் நற்பலனை நாமும் அனுபவிப்போம்.
எதைையும் வருமுன் கப்போம்..
நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119