“7வது சீனியர் தேசிய அளவிலான இலக்குப்பந்து போட்டி
சென்னை விமான நிலையத்திலிருந்து 09.03.2021 அன்று புறப்பட்டது அணியின் மேலாளர்களாக முனைவர்.அருண்பிரசன்னா மற்றும் திருமதி. சூரியா அவர்களின் தலைமையில் அணியானது சென்றது. “7வது சீனியர் தேசிய அளவிலான இலக்குப்பந்து போட்டி மற்றும் 4 வது கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டியானது முஜபார்பூர், பீகாரில் 10.03.2021 முதல் 13.03.2021 வரை பகல் மற்றும் இரவு போட்டியானது நடைபெற்றது.இதில் தமிழகத்தின் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் தமிழகத்தின் பெண்கள் அணி இரண்டு தங்கப் பதக்கத்தையும் ஆண்கள் அணி ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இன்று தமிழகம் திரும்புகின்றனர். “சிறப்பு பயிற்சி முகமானது தமிழ்நாடு இலக்குப்பந்து கழகத்துடைய பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் தலைவர் முனைவர். ஜமால் ஷரிப் க பா அவர்களது ஆலோசனையின்படி கழகத்தின் துணைத் தலைவர் திரு. பி.ராஜசேர், தொழில்நுட்ப தலைவர்கள் கழக பயிற்சியாளர் திரு.செ.கலைமுருகன் மற்றும் கழக நிர்வாக தலைவர் தே. கபிலன்ராஜ் அவர்களின் குழுவானது செயல்பட்டு பயிற்சி முகாம் ஆனது அன்சால்தோ அகாடாமி, சீனிவாச நகர், தாழம்பூர், நாவலூர், சென்னையில். 05.03.2021 முதல் தொடங்கி. 09.03.2021 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த சிறப்பு முகாம் பயிற்சி முடிவில் வீரர் வீராங்கனைகளுக்கு நிருபர் அலோடி லீனா மற்றும் முதல்வர் அரோகோகியாமரி நாத்தியா இலக்குப்பந்து வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வெற்றி பெற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு இலக்குப்பந்து கழகத்துடைய பொதுச் செயலாளர் முனைவர். ஜமால் ஷரிப் க பா வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
செய்தி கவியரசு