விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நபர் கைது

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதி, குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.பாஸ்கரன் (47), விவசாயி.
இவர் விளைந்த, மீத நெல்லை விற்பதற்காகத் திருவிடைமருதூர் வட்டத்தில் காமாட்சிபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு 116 நெல் மூட்டைகளை கொண்டு சென்றார். அவரிடம் மூட்டைக்கு ரூ.40 வீதம் லஞ்சம் கேட்கப்பட அவ்வளவு பெரிய தொகை தர இயலாது என கூறியதால், பாஸ்கரனின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேரம் பேசிய கொள்முதல் நிலைய ஊழியர்கள் கடந்த 6-ம் தேதி நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்துக் கொண்டனர். லஞ்சம் ரூ.4,200-ஐ 8-ம் தேதி கொடுத்தால்தான் உங்களது நெல்லுக்கான பணம் வங்கிக் கணக்கில் ஏறும் எனக் கூறிவிட்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலகத்தில் இன்று காலை புகார் செய்தார். பாஸ்கரனிடமிருந்து ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர் எஸ்.கேசவமூர்த்தியை (38) ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.