மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மருத்துவ மனையில் அனுமதி.
நேற்று அவர் கோவிலுக்கு சென்று சாமி கும்மிட்டு விட்டு தனது கார் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது அவரது காரினை பின்புறம் நின்ற காரில் இருந்தோர் இடித்ததாக கூறப்படுகின்றது. மேலும் மம்தா அவர்கள் காருக்குள் எற முயன்ற போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதாகவும், அதில் காரில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், தனது காலில் மிகுந்த வலியுடன் கூடிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு காவலர் கூட தன் அருகில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு நடந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
செய்தி நிலானி