டாக்டர் சாந்தா அம்மையாரின் 94 வது ஜனன தினம் இன்று …
மதிப்பிற்குரிய டொக்டர் சாந்தா அம்மையார் அவர்களின் 94 வது ஜனன தினம் இன்று …
டொக்டர்:முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை 1954 இல் நிறுவினார்.அவருக்குப் பின் அவரது மகளாகிய டாக்டர்:சாந்தா நிர்வாகப் பொறுப்பினை தனது 90 வயது வரை ஆற்றினார்…..
சென்னையில் 1927.03.11அன்று பிறந்தார் சாந்தா. தாய் முத்துலட்சுமியைப் போல் இவரும் டொக்டரானார்.புற்று நோய் மருத்துவ சேவைக்காகவே தன் வாழ்நாளை தியாகம் செய்த தியாகச்செம்மல் டொக்டர்:சாந்தா. ஆரம்பத்தில் வெறும் 12 படுக்கைகளை மட்டுமே கொண்ட இம் மருத்துவ மனையில்,டொக்டர்:சாந்தா அவர்களின் அபார உழைப்பினால் இப்போது சுமார் 400 இற்கும் மேற்பட்ட தொகையை கொண்டுள்ளது.மிகக்குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கும்
இம்மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாகவே தனது சேவையை இன்றளவிலும் வழங்கி வருகின்றது .
உலக சுகாதார அமைப்பு( ICMR) மற்றும் பல சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவராகவும்,ஆலோசகராகவும் பணியாற்றி பாரத தேசத்தின் மற்றொரு அன்னை தெரேஸாவாகத் திகழ்ந்து பெருமை சேர்த்தவர்
டொக்டர்: விஸ்வநாதன் சாந்தா MBBS,MD
1986 இல் இந்திய மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ,2006 இல் பத்மபூஷண்,2016 இல் பத்மவிபூஷண்,மற்றும் உலகப்புகழ் கொண்ட “மகசேசே”விருது என பல கௌரவங்களால் போற்றப்பட்டவர்
டொக்டர்:சாந்தா அவர்கள். 19.01.2021அன்று
இதயவலியால் காலமானார். இந்திய பிரதமர்,குடியரசு தலைவர்,தமிழக ஆளுநர்,தமிழக முதல்வர்,கட்சித்தலைவர்கள்,பல பிரபலங்கள் அன்னாருக்கு இரங்கல் தெரிவித்தனர்.அன்னாரின் பூதவுடல் அரசு மரியாதையுடன் சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவ உலகிற்கு மகத்தான சேவையை வாஞ்சையுடன் ஆற்றிய அம்மையார் அவர்கள் பிறந்த இத்தினத்தை நினைவில் கொள்வோமாக..
துயர்பகிலும்: எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை
இலங்கை.