மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
2021 ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் முதல் வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் கமலஹாசன் அவர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை தியாகராய நகர் தனியார் ஹோட்டலில் அறிவித்தார் .இதில் 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தார்கள். மீதமுள்ள தொகுதிகளுக்கு இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் . மேலும் இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் தனது திட்டங்களை திமுக மற்றும் அதிமுக காப்பி அடிப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர். செ.சுரேஷ்
தமிழ்மலர் மின்னிதழ்