நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 44
கசப்பு சுவைகளில் நல்லெண்ணையும் ஒன்று இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன என்று நமது சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளர் நமது நாட்டின் வைத்திய பெருமக்கள்…
நல்லெண்ணெய்யின் மருத்துவ மகிமைகளை இனி பார்ப்போம்.
நமது உடலை காக்கும் கவசமாக வெளிப்புற தோல் இருக்கிறது. வெளிப்புற தோலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு எண்ணெய் வகையாக நல்லெண்ணெய் இருக்கிறது. நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இந்த ஜிங்க் சத்து நமது தோலில் ஜவ்வு தன்மையை நீடிக்கச் செய்து, மிருதுவான தோல் ஏற்பட செய்கிறது. முதுமை காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது. கோடைக்காலங்களில் நல்லெண்ணெயை சிறிது எடுத்து கைகளில் மேற்புறமாக சிறிது தடவிக் கொள்வதால் கடுமையான சூரிய வெப்பத்தால் தோலுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது. மேலும் வியர்வை மற்றும் இன்னபிற தொற்றுக்கிருமிகளால் தோல் வியாதிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு சிறந்த உணவுப் பொருளாக நல்லெண்ணெய் இருக்கிறது. செசமோல் மற்றும் செசமின உட்பட பல கரைக்கப்படாத கொழுப்பு அமிலங்கள் நல்லெண்ணெயில் நிறைந்திருக்கின்றன. நல்லெண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள், நரம்புகள் போன்றவற்றில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கிறது.
உடலில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகவும், சரியான விகிதத்திலும் சென்றால் மட்டுமே நமது உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்கும். நல்லெண்ணெயில் அதீத செம்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருக்கின்றன. இதில் செம்புச்சத்து நமது உடலில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. செம்புப் சத்தினால் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலம் பிராண வாயு முழுமையாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செயல்படச் செய்கிறது.
எந்த வகை வகையான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுப்பதில் நல்லெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணையில் அதிகமுள்ளது. இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறையும் போது எலும்புகளின் மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம் அதிகம் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க நமது உணவில் செம்புச்சத்து அதிகம் இருப்பது அவசியம். நல்லெண்ணெயில் இந்த செம்புச் சத்து நிறைந்துள்ளன. நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் அந்த சத்துகள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன. குறிப்பாக ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் வீக்கங்கள் குறைவதை அனுபவபூர்வமாக உணர முடியும்.
அயில் புல்லிங் எனும் மருத்துவ செயல்முறையை பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்த மருத்துவ செயல்பாடு பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆயில் புல்லிங் செய்வதற்கு சிறந்த எண்ணெயாக நல்லெண்ணெய் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக ஒரு மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் வாயில் ஊற்றிக்கொண்டு, 20 நிமிடங்கள் வரை வாயை நன்கு கொப்பளித்து துப்பி, பிறகு பல் துலக்க வேண்டும். இந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வருபவர்களுக்கு பற்சொத்தை ஏற்படாது. ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் நீங்கும். பற்களும் வலிமை அடையும். மேலும் பற்களில் மஞ்சள் கரை ஏற்படுவதை குறைத்து பளபளப்பு தன்மையை அதிகரிக்கும்.
மனிதர்களின் மனம் ஆரோக்கியமாக இருந்தாலே உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஒரு சில மனிதர்களுக்கு காரணமற்ற அதிக படபடப்புத்தன்மை மற்றும் அதீத மன அழுத்தம் உண்டாகிறது. நல்லெண்ணெயில் இருக்கும் டிரோசின் எனப்படும் அமினோ அமிலங்கள் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த டிரோசின் எனப்படும் வேதிப்பொருள் செரட்டோனின் எனப்படும் ஒரு வேதிப்பொருளை நமது மூளையில் சுரக்கச் செய்து, உடலில் நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரித்து, மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கி மன அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
மனிதர்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு கால்சியம் சத்து அவசியமாக இருந்தாலும், செம்புச் சத்து மற்றும் ஜின்க் சத்தும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களாக இருக்கிறது. நல்லெண்ணெயில் கால்சியம், செம்பு மற்றும் ஜிங்க் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன. எலும்புகள் வலிமை பெறவும், வளர்ச்சி பெறவும் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பதால் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமையும் அதிகரிக்கிறது.
மது மற்றும் இதர போதைப் பொருட்கள் உடலுக்கு தொடக்கத்தில் நன்மை செய்வது போல் தெரிந்தாலும், காலம் செல்ல செல்ல பல விதமான உடல் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடலின் மிக முக்கிய உறுப்புகளை பாதிப்படைய செய்யும். நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் கல்லீரலில் படிந்து, மது அருந்தும் போது, அதிலிருக்கும் ஆல்கஹால் கல்லீரலை பாதிக்காமல் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கின்ற நச்சுதன்மையையும், நுண்கிருமிகளையும் வெளியேற்றுகிறது.
குழந்தைகளுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு இயற்கை உணவு மற்றும் எண்ணெயாக நல்லெண்ணெய் இருக்கிறது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் அக்குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் மற்றும் சிறந்த உடல் வளர்ச்சியையும் கொடுக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகளில் ஏற்படும் ஈரத்தன்மையால் அக்குழந்தைகளின் தோலில் சிறு அளவிலான புண்கள், கீறல்கள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட இடங்களில் நல்லெண்ணெய் துளிகளை விட்டு தடவுவதால் அக்குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தழும்புகள் நீங்குகின்றன.
நல்லெண்ணெய் எண்ணெய் குளியல் அதில் குறிப்பாக பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள். மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த முறையெல்லாம் அக்காலத்தில் நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் தவறாமல் பின்பற்றி வந்திருந்தார்கள். ஆனால் தறபோது அந்த பழக்கமெல்லாம் மறைந்துவிட்டது. இதனால் தான் என்னவோ இன்றைய சந்ததியினருக்கு நோய் தொற்றுக்கள் அதிகம் வருகிறது. எனவே நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் வருமுன் காப்போம்…!
நல்ல (உணவு) மருந்து….!
நம்ம நாட்டு (உணவு) மருந்து
தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119