காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி ராஜினாமா.
உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
புதுவையில் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ காரணமாக இருந்த எம்எல்ஏக்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. பின்னர் கடைசி நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்யத் தொடங்கினர். அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பின்னர் ஜான்குமார் என 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் கடைசி நேரத்தில் ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக புதுவை முதல்வராக இருந்த நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வந்துள்ளார்.
அங்கு அவர் முன்னிலையில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏ ஜான்குமார் மற்றும் திமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏ வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இருவரும் பாஜக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்