முன்னுரிமை சான்று:
தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் அனாதை இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள் அந்த இல்லங்களிலிருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர இயலாத கிராமப்புற தாய் / தந்தையற்ற நபர்கள் வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றின் அடிப்படையிலும் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்.
(அரசாணை நிலை எண்.8 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை நாள்:10.1.2000)
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (O.B.C) சான்று வழங்குதல்:
மைய அரசு பணிகள் மற்றும் பதவிகளில் 27 சதவிகித இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (O.B.C) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு பிரிவு ஐ அலுவலர்களுக்கும் (Creamy Layer) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் வளமான பிரிவினருக்கு (Class I Officers) பொருந்தாது. நகர்புற பகுதிகளில் காலிமனை / கட்டிடம் வைத்திருப்பதால் மட்டுமே வளமான பிரிவினராக கருத வேண்டியதில்லை. சம்பளம் மற்றும் வேளாண்மை வருமானம் நீங்கலாக இதர வருமானம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பெற்ற ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்பது ரூ.2.50 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம்) என நிர்ணயிக்கப்பட்டு திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது.(பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கடித எண்.209/ 2003-7 நாள்:21.5.2004) நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமானத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கப்பெற்றால் அல்லது சொத்துக்களின் மதிப்பு செல்வவரி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புக்கு கூடுதலாக இருந்தால் மட்டுமே வளமான பிரிவினராகக் கருத வேண்டும்.
(அரசு கடித எண்.5637 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்:12.3.2001)
2000 – 2001ம் ஆண்டு முதல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்தும் போது இறுதி சடங்கு செலவிற்கென ரூ.500/-அவரது குடும்பத்திற்கு உள்ளாட்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையினை பெற ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்குள் இருக்க வேண்டும். (அரசாணை நிலை எண்.61 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்:13.6.2000)
எஸ்.செந்தில்நாதன்
இணை ஆசிரியர், தமிழ்மலர் மின்னிதழ்