விவசாயி நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் – மம்தா பானர்ஜி
விவசாயிகளைக் கொள்ளையடித்து அவர்கள் நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லாமல் போகும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பர்பா பர்தாமன் மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண் டு பேசும் போது கூறியதாவது:-
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை தருகிறது. விவசாயிகள் விதை விதைத்து அறுவடை செய்யும் நிலையில் அனைத்தையும் பாஜகவினர்கள் எடுத்து சென்றுவிடுவார்கள்.விவசாயிகளைக் கொள்ளையடித்து அவர்கள் நிலங்களை பா.ஜனாதா எடுத்துக் கொள்ளும்.
விவசாயிகள் நலன்நிதிக்கு சரிபார்க்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதி வழங்கவில்லை. விவசாயிகளுக்கு நிதி வழங்க மறுப்பதாக பாஜக தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. ஆனால் ஒவ்வொரு விவசாயிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிதி வழங்கி வருகிறது.
கிசான் திட்டம் மூலம் மேற்குவங்க மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடுப்பதாக பாஜக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதுவரை அத்திட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு நிதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
செய்தி ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்