டிராபிக் பிரசினைகளுக்கு அதிரடி தீர்வு.
போக்குவரத்து விதிகளை மீறுவது வாடிக்கையாகி விட்டது. காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், சில நேரங்களில் தகராறு உருவாகிறது. காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும் பொழுது பிரச்சனை செய்வதாகவும் வரம்பு மீறுவதாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவது நடைபெற்று வருகிறது.
இதை அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் தற்போது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களை கவனிக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களின் சட்டையில் பாடி ஒன் கேமரா என்ற கேமரா பொருத்தப்படுகிறது.
இது இரு தரப்பையும் கண்காணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க இந்த திட்டம் கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட தற்போது சேலத்தில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இன்று முதல் இந்த பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த கேமரா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன கேமராவை ரோந்து செல்லும் காவலர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் இதை பயன்படுத்தாமல் விடக்கூடாது. வாகன தணிக்கையில் ஈடுபடும் பொழுது குடிபோதையில் தகராறு செய்தால் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டாலும், அந்த காட்சிகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்