நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி !

நீலகிரி

கேரள மாநில சுற்றுலா பயணிகள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இந்த கட்டுப்பாடு கேரளாவில் இருந்து வரும் பொதுமக்களும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல்,கொரோனா சான்றிதழுதடன் இ – ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதும் கட்டாயம் என்றும் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

முன்னதாக உதகை பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக, 1098 என்ற இலவச தொலைபேசி சேவையை தொடங்கி வைத்தார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.