நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 34

 

கசப்பு சுவைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையைப் போலவே கரிசலாங்கண்ணிக் கீரையையும் பலவிதமான மருத்துவ குணம் கொண்டது.

 கசப்பு சுவை கரிசலாங்கண்ணியில் உப்பு, துவர்ப்பு, சுவையும் கலந்துள்ள, கரிசலாங்கண்ணிக் கீரையை கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவதும் உண்டு.

கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

 இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம்.

இதன் வேறு பெயர்கள், வெண்கரிசாலை, கையந்தகரை, கைகேசி, கரிக்கை, கரியசாலை, பிருங்கராஜம், தேகராஜம் மற்றும் பொற்றலைக்கையான் ஆகியனவாகும்

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில  தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது  குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது  கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில்  உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம்  சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து,  வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.

கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

இது புரதச்சத்து, கால்சியம், இரும்பு, தங்கச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளை உள்ளடக்கியது.

கரிசலாங்கண்ணி கீரை அதிகப்படியான மருத்துவப் பயன்கள் கொண்டமையால் வள்ளலார் இக்கீரையை தெய்வீக மூலிகை என்றும், ஞானபச்சிலை என்றும் கூறியுள்ளார்.

 மூப்பைத் தடுத்து, தோல் பிணியைப் போக்குகிறது.

புற்றுநோய் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கிறது.

மஞ்சள் காமாலையை குணமாக்குகிறது.

 சுவாசப்பிரச்னையைப் போக்குகிறது.

 கல்லீரலின் பாதுகாவலனாக உள்ளது.

 உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை முடுக்கிவிடுகிறது.

 ஈறுகளைப் பலப்படுத்துகிறது.

 பார்வை நரம்புகளைப் பலப்படுத்தி, கண்வறட்சியைப் போக்குகிறது.

 அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை களைகிறது.

 தலைமுடி உதிருதல், இளநரை மற்றும் பொடுகு போன்றவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.

 அழகுசார்ந்த வகையிலும் கரிசலாங்கண்ணிகீரை பயன்படுகிறது. கண் மை மற்றும் கூந்தல் தைலம், தயாரிக்கலாம்.

 கரிசலாங்கண்ணியைப் பருப்புடன் சேர்த்தும், பொரியல் செய்தும், சூப் வைத்தும், அன்றாட உணவில் ஏதேனும் ஒருவகையில் பயன்படுத்தி வர உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெறலாம்.

எனவே நோய் வருமுன் காப்பதற்கு இது போன்ற கீரைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி குறைவற்ற செல்வத்தோடு வாழ்வோமாக…!

 நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119

Leave a Reply

Your email address will not be published.